ராகவா லாரன்ஸின் 25வது படம்
சென்னை: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
’ராக்ஷசுடு’, ‘கிலாடி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர், கல்வியாளர் மற்றும் கே.எல் பல்கலைக்கழகத்தின் தலைவர் கோனேரு சத்யநாராயணா, தற்போது ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி., என்ற நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரித்து வருகிறார்.
லாரன்ஸின் இந்த படத்தை மற்றும் சிலருடன் இணைந்து கோனேரு சத்யநாராயணா தயாரிக்கிறார். தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா மற்றும் ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும், மூன்றாவது படம் இதுவாகும். மேலும் லாரன்ஸின் 25வது படம் இதுவாகும்.
இப்படம் பல்வேறு மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. படப்பிடிப்பு நவம்பர் முதல் தொடங்குகிறது.