சென்னை

தவறவிட்ட செல்போன் ஒரு மணி நேரத்தில் மீட்பு

சென்னை: தாம்பரத்திலிருந்து, மேலகோட்டையூருக்கு சென்ற தடம் எண் 55எம் பேருந்தில் நேற்று தமிழ்நாடு உடற்கல்வி கல்லுாரியில் படித்து வரும் மாணவி உஷா பயணம் செய்தார். அப்போது தன் மொபைல்போனை பேருந்திலேயே தவற விட்டு இறங்கி சென்றுள்ளார்.

பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர் தான் அவர் தன் மொபைல்போனை பேருந்தில் தவறவிட்டது தெரியவந்துள்ளது. பின்னர் உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தாம்பரம் சைபர் கிரைம் போலீசார் மாணவியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது, மாநகர பேருந்து ஓட்டுனர் முத்துக்குமார் எடுத்து பேசியுளளா்ர.

ஒரு மணி நேரத்தில் தாம்பரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைப்பதாக அவர் கூறினார. இதையடுத்து தவறவிடப்பட்ட போன், தாம்பரம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜகுமாரன் உதவியுடன் உஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பேருந்தில் தவறவிட்ட செல்போனை ஒரு மணி நேரத்தில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.