போதை விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
சென்னை: கொளத்தூர் செங்குன்றம் சாலையில் அமைந்துள்ள அரசு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நேற்று போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், போதை தடுப்பு வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்திய 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், பொதுமக்களுக்கு போதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் போலீசார் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் உறுதி மொழி ஏற்றுக் கொண்டதோடு, ஊர்வலமாகவும், மனிதசங்கிலியாகவும் நின்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.