கைலாசம் போக, கைலாசம் தெருவுக்கு வாங்க…: இரா.பூபாலன்
சென்னை: கைலாசம் போக கைலாசம் தெருவிற்கு வாங்க என்று அழைப்பு விடுப்பது போல் உள்ளது இந்த முக்கிய சாலையின் நிலை.
இந்த சாலையில் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு?
ஆர்.கே.நகர் தொகுதி, 42வது வார்ட், தண்டையார்பேட்டை, சேணியம்மன் கோயில் தெரு, கைலாசம் சாலை தான் தண்டையார்பேட்டை மற்றும் கொருக்குபேட்டை, ஐ.ஓ.சி போன்ற பகுதிக்கு செல்ல உதவும் சாலை. (ஆர்.கே.நகர் மேற்கு பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை).
அதுமட்டும் அல்லாமல் அரசு பொது மருத்துவமனை (சின்ன ஸ்டான்லி) மற்றும் அரசு தொடக்க பள்ளி உள்ளது. பள்ளி குழந்தைகள் மற்றும் அரசு பொது மருத்துவமனைக்கு வருவோர்க்கு விபத்து ஏற்பட்டால், இழப்பிடால் ஈடு செய்ய முடிவு செய்து உள்ளனரா!
இந்த சாலை கடந்து தான் தினமும் ஆயிரக்கணக்கான எண்ணெய் டேங்கர் லாரிகள் செல்கின்றன.
கட்டாயம் மனசாட்சி உள்ள அதிகாரிகள் இந்த காணொளி பார்த்தாவது நல்லது செய்வார்கள் என நம்புகிறோம். முடிந்தால் இந்த சாலையினை தவிருங்கள், பொதுமக்கள் பார்த்து செல்லுங்கள் நன்றி
நெஞ்சு பொறுக்குதில்லையே – இரா.பூபாலன்.