இந்த ஹிட்லரை ரசிகர்களுக்கு பிடிக்கும்
சென்னை: செந்துார் பிலீம் இன்டர்நேஷ்னல் தயாரிப்பில், தனா இயக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் வரும் செப். 27 ம் தேதி வெளியாக உள்ளது.
படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் விஜய் ஆண்டனி பங்கேற்று, ரசிகர்களையும் மேடைக்கு வரவழைத்து பாடல் பாடி நடனமாடி மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசுகையில், ‘சென்னை வந்து 13 வருடம் ஆகிவிட்டது. நல்ல படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அது இப்படத்தில் நிறைவேறியுள்ளது’ என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், ‘‘ரசிகர்களுக்குப் பிடிக்கும் ஆக்சன் படமாக இப்படம் இருக்கும். பரபரப்பு திருப்பங்களுடன் ஒரு அழகான காதலும் கலந்த படம் இது,’’என்றார்.
இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.
நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.