திரைவிழா

வெற்றிப்படியில் நடிகை சாக்ஷி அகர்வால்

சென்னை: மலையாளத்தில் அறிமுகமான “பெஸ்டி” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சாக்ஷி அகர்வாலின் தமிழ்த் திரைப்படமான “பயர்” குறிப்பிடத்தக்க வகையில் 30 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

தற்போது தமிழ், மலையாளம் கடந்து ஓ.டி.டி., தளங்களில் புதிய படங்களில் நடிப்பதற்காக கையெழுத்திட்டுள்ளார்.

சாக்ஷியின் மலையாள அறிமுக திரைப்படமான “பெஸ்டி” விமர்சகர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல், தொழில்துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகவும் அவரை நிலைநிறுத்தியுள்ளது.

இதற்கிடையில், அவரது தமிழ் திரைப்படமான “பயர்” பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பதிவு செய்தது மட்டுமல்லாமல், திரையரங்குகளில் 30 நாட்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருப்பதால், குறிப்பிடத்தக்க மைல்கல்லை பதிவு செய்துள்ளது.

அவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியால் உற்சாகமான சாக்ஷி, பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் திரைத்துறையில் தனக்கான இடத்தை நிரூபிக்க உள்ளார். தனது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தி பேசிய அவர், ‘பெஸ்டி’ மற்றும் ‘பயர்’ படங்களுக்கு பார்வையாளர்களின் அன்பும் ஆதரவும் மிகப்பெரிய அளவில் உள்ளது, அடுத்து உருவாகும் திரைப்படங்கள் குறித்து நான் மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன்.  ஏனெனில் அவை நான் புதிய கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களங்களை ஏற்று நடிக்க வழிவகுக்கும்” என்றார்.