அடடே

ஆணியை விழுங்கிய கைதியால் பரபரப்பு

சவுகார்பேட்டையை சேர்ந்த அஜித், 26, கடந்த வாரம் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.

இவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இவரை பார்க்க செல்லவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட யாரும் அஜித்தை பார்க்க சிறைக்கு செல்லவில்லை. இதனால் மன விரக்தியில் இருந்துள்ள அஜித், நேற்று முன்தினம் இரவு சிறையில் கீழே கிடந்த ஆணியை எடுத்து முழுங்கி தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வலியால் துடித்த அஜித் குறித்த சக கைததிகள் சிறை அலுவலர்களிடம் தெரிவித்தனர். சிறை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அஜித் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.