ஆட்டோ டிரைவரிடம் நுாதனமாக ரூ.10,000 மோசடி
சென்னை, ஏப். 9– வியாசர்பாடியை சேர்ந்தவர் நாராயணன் (39 வயது). ஆட்டோ ஓட்டுனரான இவரது வீட்டருகே வசிக்கும் பரமேஸ்வரி நாராயணனிடம் ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தரும் படி உதவி கேட்டுள்ளார்.
இவரும், பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள ஏ.டி.எம்., சென்று பணம் எடுக்க முற்பட்டார். அப்போது ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து சென்ற நபர் ஒருவர், மீண்டும் ஏ.டி.எம்.,க்கு திரும்ப வந்து, நாராயணன் 10,000 ரூபாய் பணம் எடுத்த போது, ‘இது என்னுடையது. நான் எடுத்த பணம் இப்போது தான் வருகிறது’ எனக்கூறி ஏ.டி.எம்.,மில் வந்த நாராயணனின் பணத்தை எடுத்துச் சென்று விட்டார்.
நாராயணன் மீண்டும் 10,000 ரூபாயை தேர்வு செய்து ஏ.டி.எம்.,மில் பணத்தை எடுத்து, பரமேஸ்வரியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது பரமேஸ்வரி, ‘இரண்டு முறை 10,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக மொபைல்போனில் மெசேஜ் வந்துள்ளது’ எனக்கூறியுள்ளார். தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாராயணன், இது செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் நாராயணனை ஏமாற்றிய மர்மநபரை தேடி வருகின்றனர்.