அரசியல்

பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு

சென்னை, ஏப். 11– பா.ஜ., கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் தேர்தலில் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு அளித்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வு ஆகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை (12/04/2025) வெளியாக உள்ளது.

மேலும் பதவியேற்பு விழா சென்னை அருகே ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது.

தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலையை புகழ்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு பாஜக பிரிவின் தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார்.

பிரதமரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பறியது.

கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் நிறுவனத் திறன்களை பா.ஜ.க., பயன்படுத்தும்’ என்று கூறியுள்ளார்.