அ.தி.மு.க., தலைமையில் களமிறங்கும் பா.ஜ.,
சென்னை, ஏப். 11– சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஐ.டி.சி., கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவருடன் மேடையில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, புதிதாக தமிழக பா.ஜ., தலைவர் பொறுப்பேற்கப்போகும் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பேசிய அமித்ஷா, பங்குனி உத்திர நாள் வாழ்த்துகளை தெரிவித்து கையோடு, பா.ஜ.க., – அ.தி.மு.க., கூட்டணி அமைந்து விட்டதாக அறிவித்தார்.
தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையில் என்.டி.ஏ., கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.