புழல் ஏரி கால்வாயில் விழுந்து முதியவர் பலி
சென்னை, நவ. 26– செங்குன்றம் புழல் ஏரியில் இருந்து வடகரை வழியே செல்லும் உபரி நீர் கால்வாயில் நேற்று மதியம் முதியவர் ஒருவர், மூழ்கி இறந்து கிடப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடம் சென்ற போலீசார், முதியவர் உடலை மீட்டு விசாரித்தனர். விசாரணையில் இறந்தவர் சோழவரம் பகுதியை சேர்ந்த 75 வயதுடைய கோவிந்தன் என்பதும் கால்வாயில் விழுந்து இறந்ததும் தெரியவந்தது.
சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் விசாரித்தனர்
