Entertainment

படித்ததில் பிடித்தது

நான் கடவுள்

கடவுளோடு ஒரு முறை தேநீர் அருந்த நேர்ந்தது
அவரிடம், ‘ஒரு ஐந்து நிமிடம் நான் கடவுளாக இருக்க வரம் வேண்டும்’ என்றேன்.
கடவுளிடம் இருந்து மவுனமே பதிலாக வந்தது.

பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த குழந்தை ஒன்று தவறி விழ பார்த்தது
தாவிப்பிடித்து அதை மேஜையில் நல்லபடியாக அமர வைத்தேன்.
கடவுளிடம், ‘நான் கேட்ட வரம் என்னவானது?’ என கேள்வி எழுப்பினேன்.
‘உன் ஐந்து நிமிடங்கள் முடிந்து விட்டதே’ என கடவுள் பதிலளித்தார்.