சென்னை

ஸ்திரி சங்கமம் பண்புப் பயிற்சி முகாம்

சென்னை, ஏப். 5– தாய்மார்களுக்கான ‘ஸ்திரி சங்கமம்’ என்ற தலைப்பில் ஒரு நாள் பண்புப்பயிற்சி முகாம் பெரம்பூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா இளநிலைக்கல்லுாரி வளாகத்தில் இன்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளர் கே.இ.சீனிவாசன், முதல்வர் கே.சுபஸ்ரீ, துணை முதல்வர் காயத்ரி, மாதவன்   சதீஷ், ஜன கல்யாண் சுப்ரமணியம், ஜெயராஜ் அவர்களும் முன்னிலை வகித்தனர்.

டாக்டர். சரிதா [இயற்கை மருத்துவம் மற்றும் குத்தூசி மருத்துவ நிபுணர்], ரமா சுப்ரமணியம் (ஊட்டச்சத்து உணவுமுறை மற்றும் உணவு சேவை மலாண்மை) சமஸ்கிருத பாரதி ஒருங்கிணைப்பாளர் டி.லக்ஷ்மி அவர்களுடன், நிகழ்ச்சிக்கு மகுடம் சூட்டியதுபோல் 85க்கும் மேற்பட்ட தாய்மார்களும் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் போக்குவது குறித்தும் தாய்மார்கள் அவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளும் எடுத்துரைக்கப்பட்டன.

குறிப்பாக, குழந்தைகளுக்கான உணவு வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டன. பர்க்கர், பீட்சாவுக்கு பதில், சுண்டல், கடலை மிட்டாய் போன்ற சிறுதானிய உணவுப்பொருட்களை பழக்க தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

‘குழந்தைகளின் உணவு பழக்க முறையை ஆரம்பத்திலேயே ஆரோக்கியமாக மாற்றுவது அவசியம்’ என, நிபுணர்கள் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற தாய்மார்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.