சென்னை

அவசியத்தை உணர்த்தி வரும் 3வது கண்

சென்னையில் நிகழும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் 3வது கண் என சொல்லப்படும், சி.சி.டி.வி., எனப்படும் கண்காணிப்பு கேமரா மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

தினமும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் நடக்கும் பல்வேறு குற்றச்செயல்களில் 3வது கண் உதவியுடன் போலீசார் குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் மாதவரம் பால்பண்ணை சுற்றுவட்டாரத்தில் உள்ள குடோன், பழைய இரும்பு பொருட்களை வைத்துள்ள கிடங்குகளின் பூட்டை உடைத்து திருடிய ஐவர் கும்பலை மாதவரம் பால்பண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் பகலில் பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஒப்பந்ததாரர்கள் போலவும், இரவில் பூட்டை உடைக்கும் பலே திருடர்களாகவும் வலம் வந்துள்ளனர். இவர்களை போலீசார் 3வது கண் உதவியுடன் பிடித்து அவர்களிடமிருந்து ஒரு மினி வேன் மற்றும் 2 லட்ச ரூபாயையும் கைப்பற்றியுள்ளனர்.

 

திருடர்களை கூண்டோடு பிடித்த போலீசாரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்த வகையில், 3வது கண் பயன்பாட்டை உணர்ந்து வணிகர்கள், பொதுமக்கள் தேவைப்படும் இடங்களில் சி.சி.டி.வி., கேமரா செயல்பாட்டை நிறுவுவது மிகவும் அவசியமாகியுள்ளது.