சென்னை

கவர்னரிடம் விவேகானந்த வித்யாலயா பள்ளி மாணவியர் ஆசி

சென்னை அக்.05: சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவன் கவர்னர் மாளிகையில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் 2ம் நாளான்று, நடந்த நிகழ்ச்சியில், விவேகானந்த வித்யாலயா பள்ளி மாணவியர் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

நிகழ்ச்சியின் போது, மாத்துார் மற்றும் பெரம்பூர் பள்ளி தாளாளர்களான ராமச்சந்திரன் மற்றும் சீனிவாசன் ஆகியோர், கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களை நேரில் சந்தித்தனர்.

மேலும், வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டும் கவர்னருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி, ராஜ்பவனில் வைக்கப்பட்டிருந்த நவராத்திரி கொலுவை கண்டு ரசித்தனர்.

தமிழகத்தில் கலாச்சாரத்தையும், பாரம்பரிய விளையாட்டையும் பறைசாற்றும் வகையில்  அமைக்கப்பட்டிருந்த கொலு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. மேலும், கவர்னர் மற்றும் அவரது மனைவியிடம் பள்ளி மாணவியர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இந்நிலையில் கவர்னர் மாளிகையில் இன்று வள்ளலார் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில், விவேகானந்தா வித்யாலயா சொசைட்டி செயலர், பள்ளி தாளாளர்கள், பெரம்பூர் மற்றும் மாத்துார் விவேகானந்தா வித்யாலயா பள்ளி முதல்வர்களான சுபஸ்ரீ மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பங்கேற்று கவர்னரை சந்தித்து நினைவுப்பரிசுகளை வழங்கினர்.