மற்றவர்களுக்காக ஆடை அணிய வேண்டாம். உங்களுக்கான ஸ்டைலை உருவாக்குங்கள்: பிரீத்தி முகுந்தன்
சென்னை ஜூலை 19: ஜென்சி இளைஞர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ZECODE ஷோரூமை நடிகை பிரீத்தி முகுந்தன் சென்னையில் திறந்து வைத்தார்.
ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சியாராம்ஸ் நிறுவனம், ஜென் Z இளைஞர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கியுள்ள ZECODE என்ற புதிய ஆடை ஷோரூமை பெங்களூருவைத் தொடர்ந்து தற்போது சென்னையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை ஸ்கை ஒன் அம்பா மால் வளாகத்தில் நடைபெற்ற திறப்பு விழாவில், ‘பிளாஸ்ட்’ மற்றும் ‘இதயம் முரளி’ படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை பிரீத்தி முகுந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய பிரீத்தி முகுந்தன், “எனக்கு பேஷன் மீது எப்போதும் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. நானும் ஜென்சி தலைமுறையைச் சேர்ந்தவள் என்பதால், இளைஞர்களின் ரசனையை புரிந்துகொண்டு, அழகான வடிவமைப்பு, சிறந்த தரம் மற்றும் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ள ZECODE-ஐ மனதார பாராட்டுகிறேன்.

எனக்கு ஸ்டைலாக இருப்பது பிடிக்கும். ஆனால் அதே நேரத்தில், அதிக விலை கொண்ட ஆடைகளை விட வசதியான, தரமான மற்றும் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும் ஆடைகளையே விரும்பி அணிவேன். இங்குள்ள அனைத்து ஆடைகளின் வடிவமைப்பும், தோற்றமும், ஸ்டைலும் என்னை மிகவும் கவர்ந்துள்ளன.
சென்னையில் முதல் ZECODE ஷோரூமை தொடங்கியுள்ள சியாராம்ஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த புதிய ஆடைத் தொகுப்புகள் சென்னை இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.
இளைஞர்களுக்கான தனது பேஷன் ஆலோசனையாக, “உங்களுக்கு பிடித்த ஆடையை தன்னம்பிக்கையுடன் அணியுங்கள். உங்கள் ஆடை உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தட்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக உங்கள் விருப்பத்தை மாற்ற வேண்டாம்.
உங்களுக்கான ஸ்டைலை நீங்களே உருவாக்குங்கள். ஃபேஷனுக்கு கட்டுப்பாடுகள் இல்லை; நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ, அதையே உங்கள் ஆடை மூலம் உலகிற்கு காட்டுங்கள்” என்று அவர் தெரிவித்தார்.
50 ஆண்டுகால பாரம்பரியத்தை கொண்ட சியாராம்ஸ் நிறுவனம், இளம் தலைமுறையின் விருப்பங்களை மையமாகக் கொண்டு ZECODE பிராண்டை அறிமுகப்படுத்தியிருப்பது, சென்னை ஆடை சந்தையில் புதிய கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

