முடிவு எப்படி வந்தாலும் கவலப்படாதீங்க! – ஜி.வி.பிரகாஷ்குமார்
சென்னை, மே 7-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ம் தேதி வெளியாக உள்ள நிலையில் முடிவுகள் இப்படி வந்தாலும் கவலைப்பட வேண்டாம் என நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ்குமார் கூறியுள்ளதாவது:
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவ மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். முடிவு எப்படி வந்தாலும் கவலைப்பட வேண்டாம். இது வாழ்க்கையின் ஒரு கட்டம் மட்டுமே. உங்களை நம்புங்கள். தன்னம்பிக்கையுடன் இருந்து உங்கள் கனவுகளை நோக்கி தொடர்ந்து முன்னேறி செல்லுங்கள் .
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

