ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு ஆசார்யனாக யாரை கொண்டாடுகிறார்கள்
ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய குருபரம்பரையில் 18-வது ஆசார்யர் சுவாமி மணவாள மாமுனிகள் ( 1370 – 1443). ”மாற்றற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் வந்திலனேல்: ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே” என்பது வழக்கு.
அதாவது ஸ்ரீமணவாள மாமுனிகள் அவதரிக்கவில்லை என்றால் இன்று தமிழ் பிரபந்தங்கள் ஆற்றிலே கரைத்த புளியாய் போயிருக்கும். திருவாய்மொழி 36,000 படி ஈட்டை உள் அர்த்தங்களை அழகான தமிழில் விரிவுரைக்கும் வல்லமை பெற்றவர் 18-வது ஆசார்யர் சுவாமி மணவாள மாமுனிகள்.
ஸ்ரீரங்கம் பெரியபெருமாள் ஓர் ஆண்டு தன்னுடைய உற்சவங்களை எல்லாம் நிறுத்தி, மணவாள மாமுனிகளின் காலட்சேபத்தை கேட்டார். சாற்றுமுறை தினமான (கடைசி நாள் ) ஆனி மூலம் நட்சத்திரம் அன்று “ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்”என்று, நம்பெருமாளே இந்தத் ஸ்லோகத்தை ஒரு சிஷ்யனின் காணிக்கையாக கொடுத்துச் சென்றார். அதனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு இவரை ஆசார்யனாக இன்றும் கொண்டாடுகிறார்கள்.

