ஆன்மீகம்

எந்த காரியங்கள் நன்மை நல்காது – ஸ்ரீ உ.வே.ஸ்ரீநிதிஸ்வாமி

நீங்கள் எதைச் செய்தாலும் அதனை மனமொன்றி ஈடுபாட்டுடன் செய்க. துாய்மையான உள்ளத்தினால் உந்தப்பட்டே நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.
மனமின்றிச் செய்யும் காரியங்கள், ஒரு போதும் நன்மைகளை நல்காது.

ஆயினும் நாம் செய்யும் காரியங்களைச் சீர்துாக்கிப் பார்க்க உங்கள் அறிவையும், பயன்படுத்த வேண்டியிருந்தால், அவசியம் அவ்விதமே செய்க.
அறிவினால் சிந்தித்து ஒன்றிய; பொருந்திய மனத்தினால் காரியமாற்று. நல்லறிவும் நன்மனமும் சேர்ந்து இயங்கும் போது எக்காலத்திலும் நன்மைகளுக்கு குறைவு வராது.

– அக்காரக்கனி
ஸ்ரீ உ.வே.ஸ்ரீநிதிஸ்வாமி