அரசியல்

விஜய் வரலாற்று வெற்றி

சென்னை: மே 4- தமிழக சட்டசபை தேர்தலில்,நடிகரும், த.வெ.க., கட்சித் தலைவருமான விஜய், தமிழக சட்டசபை தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இரண்டு மலை போன்ற திராவிட கட்சிகளை தாண்டி இந்த வரலாற்று வெற்றியை அதுவும் முதல் தேர்தலிலேயே பெற்றிருப்பது இந்தியாவையே உற்று நோக்க வைத்துள்ளது.

விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் இரண்டிலும் வெற்றி பெற்ற அவர், திருச்சி கிழக்கு தொகுதியில் 84,465 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் இனிகோ இருதயராஜை விட 58,496 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

பெரம்பூர் தொகுதியில் 1,00,582 ஓட்டுகள் பெற்ற விஜய், 44,583 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.சேகரை வீழ்த்தியுள்ளார். ஆர்.டி.சேகர் 55,999 ஓட்டுகள் பெற்றார்.